Homeசெய்திகள்தமிழ்நாடுமாநிலக் கட்சிகள்தான் இனி நாட்டுக்கு ஒரே வழி! - இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் குறித்து...

மாநிலக் கட்சிகள்தான் இனி நாட்டுக்கு ஒரே வழி! – இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் குறித்து ஐயநாதன் ஓபன் டாக்!

-

- Advertisement -

இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய அன்றே அதன் அரசியல் மாண்பு முற்றிலுமாக சிதைந்துவிட்டது என்று மூத்த பத்திரிகையாளரும், அரசியல் திறனாய்வாளருமான திரு. ஐயநாதன் தெரிவித்துள்ளார்.மாநிலக் கட்சிகள்தான் இனி நாட்டுக்கு ஒரே வழி! - இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் குறித்து ஐயநாதன் ஓபன் டாக்!

‘ஈ தமிழ் நியூஸ்’ ஊடகத்திற்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், தற்போதைய தேசிய மற்றும் மாநில அரசியல் நிலவரங்கள் குறித்துப் பல்வேறு அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

we-r-hiring

காங்கிரஸ் கட்சியின் மீது கடும் விமர்சனம்:
தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய ஐயநாதன், பலத்த விமர்சனங்களை முன்வைத்தார்.

தேர்தலில் வெற்றிபெற்ற மறுநாளே காங்கிரஸ் கட்சி கூட்டணியை விட்டு விலகியதாகக் குறிப்பிட்ட அவர், பதவி, பணம் மற்றும் அதிகாரத்தைத் தவிர வேறு எந்த நாட்டப்பற்றும் அக்கட்சிக்குக் கிடையாது எனத் குற்றம் சாட்டினார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் பச்சோந்தித் தனமான அரசியலை நம்பி இனிப் பயனில்லை என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

மாநிலக் கட்சிகளின் கூட்டு அவசியமானது:
நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மாற்று அரசியல் அணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் மாநிலக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக ஐயநாதன் தெரிவித்தார்.

திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, சிவசேனா மற்றும் இடதுசாரிக் கட்சிகள் போன்ற பிராந்திய சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு வலுவான ஜனநாயகக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ராகுல் காந்தியின் நடைபயணங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், அதுதொடர்பான சமூக நீதி உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களை அவர் பாதியிலேயே மூட்டை கட்டி வைத்துவிட்டதாகவும், அதனால் எந்தவிதப் பயனும் விளையவில்லை என்றும் விமர்சித்தார்.

த.வெ.க. அரசியல் மற்றும் ஈவிஎம் எதிர்ப்பு இயக்கம்:
தமிழக அரசியல் சூழல் மற்றும் த.வெ.க. கட்சியின் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், பாஜகவை எதிர்கொள்ளும் விவகாரத்தில் மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு எந்த அளவுக்கு அவசியமோ, அதேபோல் தேர்தல் முறைகளிலும் பல மாற்றங்கள் தேவை என்றார்.

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) எதிராகத் தீவிர முன்னெடுப்புகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்த அவர், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் ஈவிஎம் முறைக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தேசிய அளவில் காங்கிரஸ் மீதான நம்பகத்தன்மை குறைந்துவரும் சூழலில், பிராந்தியக் கட்சிகளின் கூட்டு மட்டுமே நாட்டிற்கு சரியான வழிகாட்டலை வழங்கும் என்ற அவரது கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள் கலாச்சாரம்! தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

MUST READ