சோதனை நடவடிக்கை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பதற்றமான சூழல்: விசாரணை நடைபெறும் வீட்டிற்குள் தி.மு.க.வினர் நுழைய முயன்றதால் அங்கு திடீர் தள்ளுமுள்ளும், பெரும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் குவிப்பு: அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விரிவானச் செய்தி:
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வசூலித்து மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டிலும் தொடர்புடைய இடங்களிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோதனையானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அன்பில் மகேஷ் வீட்டின் வெளியே ஏராளமான திமுக தொமுகவினரும், கட்சியினரும் குவினர்.
அப்போது, திடீரென அவர்கள் சோதனை நடைபெறும் வீட்டிற்குள் நுழைய முயன்றதால் அங்கு காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் கடுமையான பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும்கூடுதல் காவல்துறையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
