Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்தில் சிசிபி போலீஸார் அதிரடி சோதனை: அரசியல் பழிவாங்கும்...

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்தில் சிசிபி போலீஸார் அதிரடி சோதனை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கே.என்.நேரு கண்டனம்!

-

- Advertisement -

தமிழகத்தின் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திமுகவின் முக்கியப் பிரமுகருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனச் சாடியுள்ளது.

we-r-hiring

கோடி ரூபாய் தனியார் பள்ளி மோசடி புகார்!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் பி.டி. அரசகுமார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளிடமிருந்து சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் பி.டி. அரசகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த முறைகேடு மற்றும் பணப் பரிமாற்ற விவகாரத்தில், கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்போது இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சோனை நடைபெற்று வரும் தகவலறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மற்றும் கட்சியினர் அவர் வீட்டின் முன்பு குவிற்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கே.என்.நேரு கடும் கண்டனம்: “தவெக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் நடக்கும் சோதனை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

* பயமுறுத்தும் அரசியல்: “எதிர்க்கட்சியில் திறம்படப் பணியாற்றும் மற்றும் மக்களிடையே பிரபலமாக இருக்கும் திமுகவினரைக் குறிவைத்து, தவெக அரசு இதுபோன்ற சோதனைகள் மற்றும் விசாரணைகள் மூலம் அச்சுறுத்தப் பார்க்கிறது. இது வெளிப்படையான அரசியல் பழிவாங்கும் செயலாகும்” என்று அவர் குற்றம் சாட்டினார்.

* காவல்துறையினர் தடுத்து நிறுத்தம்: அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்துப் பேசுவதற்குச் சென்ற தங்களையும் காவல்துறையினர் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், தொலைபேசியில் தன்னிடம் பேசிய அன்பில் மகேஷ், “சோதனை முடிந்த பிறகு வெளியே வந்து அனைவரையும் சந்திக்கிறேன்” என்று கூறியதாகக் குறிப்பிட்டார்.

* நீதிமன்றத்தில் நிரூபிப்போம்: இந்தச் சோதனையைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்றும், நீதிமன்றத்தின் வாயிலாகத் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிரூபித்துச் சட்டப்படி வெற்றி பெறுவோம் என்றும் கே.என்.நேரு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்குப்பதிவு:

MUST READ