சிறந்த இசையமைப்பாளா் விருது வழங்கிய தமிழக அரசுக்கு ஏ.ஆா்.ரகுமான் நன்றி தெரிவித்துள்ளாா்.
2016-2022ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர், நடிகை விருதுகள் தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கு சிறந்த இசையமைப்பாளா் விருது ஏ.ஆா்.ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து, ஏ.ஆா்.ரகுமான் தனது எக்ஸ்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிறந்த இசையமைப்பாளா் விருது வழங்கி அங்கீகாரம் அளித்த தமிழக அரசுக்கு கூறியதுடன், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு சிறப்பானது என்றும் புகழ்ந்துள்ளார். தமிழக அரசின் திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என கூறினாா்.
