கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘லீலை’ திரைப்படத்தின் நாயகன், நாயகி மற்றும் இயக்குநர் ஆகியோர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சந்திப்பு
புதுமையான கதைகளமும், ‘ஜில்லென்று ஒரு கலவரம்’ போன்ற துள்ளலான பாடல்களும் நிறைந்த ‘லீலை’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஷிவ் பண்டிட், கதாநாயகியாக நடித்த மானசி பரேக் மற்றும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நேரில் சந்தித்துப் பேசிக் கொண்டுள்ளனர்.
ரசிகர்களைக் கவர்ந்த நினைவலைகள்
இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தங்களின் நினைவலைகளை அவர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். 14 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதே நட்புடனும் உற்சாகத்துடனும் அவர்கள் எடுத்துக்கொண்ட இந்தப் புகைப்படங்கள் ‘லீலை’ படத்தின் ரசிகர்களைப் பழைய நினைவுகளில் மூழ்கடிப்பதோடு, இணையத்தில் அதிக கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
கதாநாயகன் லோகேஷ் கனகராஜ் தான் மாஸ்.. தூணாக நின்ற வமிகா கேபி! அல்லு அர்ஜுனின் வைரல் விமர்சனம்!

