சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா பெயரிலான இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.


பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அக்டோபர் 11-ம் தேதி சென்னை வருகிறார். அவரது சென்னை பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
சென்னை விமான நிலையம் வந்தடையும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லிக்கு செல்கிறார். அங்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்து, மெட்ரோ ரெயிலில் போரூர் வரை பயணம் மேற்கொள்ள உள்ளார். பின்னர் சாலை வழியாக சென்னை ஐஐடி வளாகத்துக்கு செல்கிறார்.
ஐஐடி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து தனது சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்படுகிறார்.
இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்துக்கான அடிக்கல் கடந்த 2024-ம் ஆண்டு நாட்டப்பட்டது. இதற்காக சென்னை ஐஐடி மற்றும் இளையராஜாவின் இசை நிறுவனத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மையம் திறக்கப்பட உள்ளது.
இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், இசை மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளுக்கான முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறந்தநாளில் ரச்சிதா ராமுக்கு ஷாக் கொடுத்த ரசிகர் – வைரலாகும் வீடியோ
