இந்தி திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஆர். பால்கி, முதன்முறையாக நேரடியாக தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை வித்யா பாலன் கதாநாயகியாக நடிக்கிறார்.


வித்யா பாலன் மற்றும் ஆர். பால்கி ஏற்கனவே 2009-ம் ஆண்டு வெளியான ‘பா’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளதால், இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை வித்யா பாலன் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார். படத்தின் ஸ்கிரிப்ட்டை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “New Beginnings” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் படத்தின் கதை, வித்யா பாலன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. படக்குழு இது தொடர்பான கூடுதல் அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆர். பால்கியின் இயக்கத்தில் வித்யா பாலன் மீண்டும் இணைந்திருப்பதும், இளையராஜா இசையமைப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழில் வித்யா பாலனின் அடுத்தடுத்த படங்களின் வரிசையில் இந்தப் படமும் இணைந்துள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது ஆர். பால்கியின் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
பிறந்தநாளில் ரச்சிதா ராமுக்கு ஷாக் கொடுத்த ரசிகர் – வைரலாகும் வீடியோ
