Homeசெய்திகள்சினிமாபிரசாந்த் நடிப்பில் உருவாகும் 'ரஞ்ஜன்' பட ரிலீஸ் அப்டேட்!

பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘ரஞ்ஜன்’ பட ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘ரஞ்ஜன்’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.பிரசாந்த் நடிப்பில் உருவாகும் 'ரஞ்ஜன்' பட ரிலீஸ் அப்டேட்!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான ‘அந்தகன்’ எனும் இந்தி ரீமேக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது அவர் மீண்டும் ஒரு புதிய ரீமேக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தியாகராஜன் இயக்கும் இந்த படத்திற்கு ரஞ்ஜன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளியான ‘கோர்ட்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படம்
​நீதிமன்றப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் நடிகர் பிரசாந்த் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ​ பிரசாந்துடன் இணைந்து சத்யராஜ், இனியா, தேவயானி, விஜயகுமார், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரசாந்த் நடிப்பில் உருவாகும் 'ரஞ்ஜன்' பட ரிலீஸ் அப்டேட்! இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளைக் கவனித்து வருகிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
​இந்நிலையில், ரஞ்ஜன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், படம் விரைவில் முழுமையாக நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தை வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நீதிமன்றப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் புதிய படைப்பு பிரசாந்தின் சினிமா பயணத்தில் மற்றொரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
​

MUST READ