Homeசெய்திகள்சினிமாரஜினி நடிப்பில் உருவாகும் 'தர்மன்'... முடிவுக்கு வரும் படப்பிடிப்பு... எப்போது தெரியுமா?

ரஜினி நடிப்பில் உருவாகும் ‘தர்மன்’… முடிவுக்கு வரும் படப்பிடிப்பு… எப்போது தெரியுமா?

-

- Advertisement -

ரஜினி நடிப்பில் உருவாகும் தர்மன் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.ரஜினி நடிப்பில் உருவாகும் 'தர்மன்'... முடிவுக்கு வரும் படப்பிடிப்பு... எப்போது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது. இதற்கிடையில் ரஜினிகாந்த், ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரஜினியின் 173 வது படமாகும்.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். குறிப்பாக, இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருவது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில் உருவாகும் 'தர்மன்'... முடிவுக்கு வரும் படப்பிடிப்பு... எப்போது தெரியுமா?அதே சமயம் இந்த படத்தை 2027 ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் முழு படப்பிடிப்பும் வரும் டிசம்பர் மாதத்திற்குள்ளோ அல்லது பொங்கலுக்கு முன்போ முழுமையாக நிறைவடையவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே கோலிவுட்டில் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தர்மன்’ படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ