Homeசெய்திகள்சினிமாகீர்த்தி சுரேஷ் எனக்கு மகள் மாதிரி.... 'சத்தியவான் சாவித்திரி' பட விழாவில் மிஷ்கின்!

கீர்த்தி சுரேஷ் எனக்கு மகள் மாதிரி…. ‘சத்தியவான் சாவித்திரி’ பட விழாவில் மிஷ்கின்!

-

- Advertisement -

இயக்குனர் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் குறித்து பேசியுள்ளார்.கீர்த்தி சுரேஷ் எனக்கு மகள் மாதிரி.... 'சத்தியவான் சாவித்திரி' பட விழாவில் மிஷ்கின்!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், பிரபல இயக்குநர் மிஷ்கின் ஒருபக்கம் படங்களை இயக்கி வந்தாலும், மறுபக்கம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ​இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து வழக்கறிஞர்களாக நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ‘சத்தியவான் சாவித்திரி’. இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படம் நாளை (நவம்பர் 20) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கீர்த்தி சுரேஷ் எனக்கு மகள் மாதிரி.... 'சத்தியவான் சாவித்திரி' பட விழாவில் மிஷ்கின்!அதற்கான முழு ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே வெளியான படத்தின் பாடல்களும் டிரெய்லரும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. ​இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து இயக்குநர் மிஷ்கின் மனம் திறந்து பேசினார். கீர்த்தி சுரேஷ் எனக்கு மகள் மாதிரி.... 'சத்தியவான் சாவித்திரி' பட விழாவில் மிஷ்கின்!இது குறித்து அவர், “படப்பிடிப்பிற்கு முன்பு எங்கள் இருவரையும் ஒன்றாகப் பயிற்சி எடுக்கப் படக்குழுவினர் கேட்டார்கள். ஆனால், கீர்த்தி சுரேஷுடன் இணைந்து எப்படி நடிக்கப் போகிறேன் என்ற ஒரு சிறிய தயக்கம் எனக்குள் இருந்ததால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இரண்டு நாட்களாக நான் அவரிடம் பேசவே இல்லை. பிறகு அவரிடம், ‘நீ என் மகளைப் போல இருக்கிறாய்’ என்று சொன்னேன். எங்கள் இருவருக்கும் ஒரு அப்பா – மகள் பிணைப்பு உள்ளது. அவர் எனக்கு மகள் போன்றவர். இப்போதும் கூட நான் அவரிடம், ‘நீ இன்னும் 20 வருடங்களுக்குத் தொடர்ந்து நடிக்க வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

 

MUST READ