Homeசெய்திகள்சினிமாலெஜண்ட் சரவணனின் அடுத்த மாஸ் படம்... டைட்டில் இதுதானா?

லெஜண்ட் சரவணனின் அடுத்த மாஸ் படம்… டைட்டில் இதுதானா?

-

- Advertisement -

லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ​லெஜண்ட் சரவணனின் அடுத்த மாஸ் படம்... டைட்டில் இதுதானா?

தொழில் அதிபராக இருந்து ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் சரவணன். அந்தப் படத்தின் மேக்கிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இருப்பினும் அவருடைய தோற்றம் கேலிக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து, இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘லீடர்’ படத்தில் நடித்தார் லெஜண்ட் சரவணன். அப்படத்தில் தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றி, நேர்த்தியான ஆக்ஷன் காட்சிகளுடன் நடித்து ரசிகர்களிடம் ஆதரவைப் பெற்றார்.
​இஅதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் தனது அடுத்த திரைப்படத்திற்கு தயாராகியுள்ள லெஜண்ட் சரவணன் ‘மான் கராத்தே’, ‘கெத்து’, ‘ரெட்டத் தல’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் மூன்று வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது.லெஜண்ட் சரவணனின் அடுத்த மாஸ் படம்... டைட்டில் இதுதானா? அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக ​தொடங்கும் என்றும் சொல்லப்பட்டது. தற்போது இதன் கூடுதல் தகவலாக, இப்படத்திற்கு ‘பிசினஸ்மேன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற நடிகர், நடிகைகளின் விவரங்களும், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ