Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் 'துரந்தர்' படமெகா கூட்டணி! ... இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

மீண்டும் இணையும் ‘துரந்தர்’ படமெகா கூட்டணி! … இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

-

- Advertisement -

துரந்தர் பட கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரன்வீர் சிங் – ஆதித்யா தர் கூட்டணியில் உருவாகும் அடுத்த பிரம்மாண்ட படம் உருவாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.மீண்டும் இணையும் 'துரந்தர்' படமெகா கூட்டணி! ... இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

​தென்னிந்திய சினிமாவில் இப்போதெல்லாம் பல பிரம்மாண்ட திரைப்படங்கள் ரூ. 1,000 கோடி என்ற இமாலய வசூல் மைல்கல்லை எட்டி புதிய வரலாறு படைத்து வருகின்றன. அந்த வரிசையில், பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ மற்றும் அதன் இரண்டாம் பாகமான ‘துரந்தர் 2′ ஆகிய திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து பிரம்மாண்ட சாதனை படைத்தன. இந்த படங்களில் ஆக்சன், இசை, ஒளிப்பதிவு ஆகியவை பலராலும் பாராட்டப்பட்டது. தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.’துரந்தர்’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ரன்வீர் சிங்கும் இயக்குநர் ஆதித்யா தர்-ம் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மீண்டும் இணையும் 'துரந்தர்' படமெகா கூட்டணி! ... இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

முந்தைய படங்களை விடவும் மிகப்பெரிய அளவில் இப்புதிய படைப்பை உருவாக்கக் குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ‘துரந்தர்’ படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டிய இந்தச் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களிடையே இப்போதே உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரங்களும் மற்ற தகவல்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

​

MUST READ