Homeசெய்திகள்சினிமாபாலாவுடன் இணையும் வெற்றிமாறன்.... புதிய கூட்டணியால் எகிறும் எதிர்பார்ப்பு!

பாலாவுடன் இணையும் வெற்றிமாறன்…. புதிய கூட்டணியால் எகிறும் எதிர்பார்ப்பு!

-

- Advertisement -

பாலா மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரின் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது.பாலாவுடன் இணையும் வெற்றிமாறன்.... புதிய கூட்டணியால் எகிறும் எதிர்பார்ப்பு!

தமிழ் சினிமாவில் தனது படைப்புகளின் மூலம் எப்போதும் ஒரு தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்துபவர் இயக்குநர் பாலா. ‘நந்தா’, ‘பிதாமகன்’ போன்ற படங்களை போல் கடைசியாக வெளியான ‘வணங்கான்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. அதேபோல், தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநராக வலம்வரும் வெற்றிமாறன், ஒருபக்கம் அடுத்தடுத்த படங்களை இயக்கி வந்தாலும், மறுபக்கம் தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் இந்த இருபெரும் ஆளுமைகளான இயக்குநர் பாலாவும், வெற்றிமாறனும் ஒரு புதிய திரைப்படத்திற்காக முதன்முறையாகக் கூட்டணி அமைக்கவுள்ளனர்.
முழுக்க முழுக்கப் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இப்படத்தை இயக்குநர் பாலா இயக்க, வெற்றிமாறன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார்.பாலாவுடன் இணையும் வெற்றிமாறன்.... புதிய கூட்டணியால் எகிறும் எதிர்பார்ப்பு! ஏற்கனவே இப்படத்திற்காக நான்கு பாடல்களை அவர் இசையமைத்து முடித்துவிட்டதாகவும், அந்தப் பாடல்களைக் கேட்ட வெற்றிமாறன் தனது பாராட்டுகளை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், வெற்றிமாறன் சமீபத்தில் லிடியனை நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலாவின் இயக்கம், வெற்றிமாறனின் தயாரிப்பு, லிடியன் நாதஸ்வரத்தின் இசை என இந்தப் புதிய கூட்டணி குறித்த தகவல் ரசிகர்களிடையே இப்போதே உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளிவரும் என நம்பப்படுகிறது.

 

MUST READ