மாரி செல்வராஜின் மஞ்சணத்தி பட லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் மூலமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார். அந்த வகையில் இவர் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதற்கடுத்து ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ என அடுத்தடுத்த படங்களை இயக்கினார். கடைசியாக ‘பைசன்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த எல்லாப் படங்களுமே ரசிகர்களிடம் நல்லா வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்திருந்த கதிரை வைத்து மீண்டும் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். அந்தப் படத்திற்கு ‘மஞ்சணத்தி’ எனப் பெயர் வைத்துள்ளனர். அந்தப் படத்தில் கதிருடன் இணைந்து பிரியங்கா மோகன், கயடு லோகர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படமானது நான்கு பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி, காஷ்மீர் போன்ற இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் 2027 ஜனவரி மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த படம் 2027 ஆம் ஆண்டு முதல் பாதியில் திரைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
