Homeசெய்திகள்சினிமாஇந்திய பாக்ஸ் ஆபிஸில் சரித்திரம் படைக்கும் 'ராமாயணா'!

இந்திய பாக்ஸ் ஆபிஸில் சரித்திரம் படைக்கும் ‘ராமாயணா’!

-

- Advertisement -

ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் ஆகியோரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம், கடந்த நவம்பர் 5-ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. இந்திய பாக்ஸ் ஆபிஸில் சரித்திரம் படைக்கும் 'ராமாயணா'!ஹை பட்ஜெட்டில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியிருந்த இப்படத்தில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள், கிராபிக்ஸ் மற்றும் விஷுவல்ஸ் என அனைத்தும் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இந்த படத்தின் மேக்கிங் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய பாக்ஸ் ஆபிஸில் சரித்திரம் படைக்கும் 'ராமாயணா'!அதே சமயம், ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பு கவனிக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக ராவணனாக நடித்திருந்த யஷ்-ன் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இருப்பினும், படத்தின் நீளம் சற்று அதிகமாக இருப்பதாகவும், ராமரை விட ராவணனின் கதாபாத்திரம் சற்று வலிமையாகக் காட்டப்பட்டுள்ளதாகவும் ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்தன.
​ஆனால், இத்தனை விமர்சனங்களையும் தாண்டி வெளியான எட்டு நாட்களிலேயே இப்படம் அதிகப்படியான வசூலை வாரிக் குவித்தது. தொடர்ந்து 1,000 கோடி ரூபாயை கடந்து சாதனை படைத்த இப்படம், தற்போது வரை உலகளவில் ₹1,500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.இந்திய பாக்ஸ் ஆபிஸில் சரித்திரம் படைக்கும் 'ராமாயணா'! அதுமட்டுமில்லாமல் இந்த படம் இந்தியாவில் மட்டுமே ரூ.1009 கோடியை கடந்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் படத்தின் வசூல், பாகத்திற்குக் கிடைத்துள்ள பாராட்டுகளும், இந்த விமர்சனங்களும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகமாக்கியுள்ளது. இருப்பினும் இந்த படம் மொத்தமாக எத்தனை கோடி வசூல் செய்யும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ