Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாகும் 'ஓ.ம்'.... இணையத்தில் பரவும் இன்சைட் ரிப்போர்ட்.... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

நாளை வெளியாகும் ‘ஓ.ம்’…. இணையத்தில் பரவும் இன்சைட் ரிப்போர்ட்…. கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

-

- Advertisement -

‘அமரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோரின் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஓ.ம்’ – O.M திரைப்படம் நாளை (நவம்பர் 20) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.நாளை வெளியாகும் 'ஓ.ம்'.... இணையத்தில் பரவும் இன்சைட் ரிப்போர்ட்.... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்! படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. அதேசமயம் நாளை திரையரங்குகளில் இப்படத்தைக் கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர்.
​இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முழுக்க முழுக்க ஒரு பிரம்மாண்டமான கிரைம் டிராமா மற்றும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கியுள்ளாராம். முழு நீள ஆக்ஷன் படமாக இல்லாமல், மிக நுணுக்கமான விவரங்களுடன் படம் அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இந்த படத்தில் 2 மிக அழுத்தமான ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இருந்தாலும், அவை கதையோடு சரியான இடத்தில் பொருத்தப்பட்டு, பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம் தனுஷ் ரசிகர்களுக்கு நிச்சயம் கூஸ்பம்ப்ஸ் அனுபவத்தைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
​கதை எளிமையானதாகவும் வழக்கமானதாகவும் இருந்தாலும், எழுத்து, திரைக்கதை மற்றும் படத்தைக் கொண்டு செல்லும் விதம் இந்த படத்தை தனித்துவமானதாக மாற்றும் என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர இசையமைப்பாளர் சாய் அபியங்கரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது என்றும் படம் முழுக்க மிகவும் கலகலப்பான, துடிப்பான, அதே சமயம் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் தனுஷைப் பார்க்கலாம் என்றும் சினிமா விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாளை வெளியாகும் 'ஓ.ம்'.... இணையத்தில் பரவும் இன்சைட் ரிப்போர்ட்.... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!அடுத்தது ​மம்மூட்டியும் மாஸான, அதேசமயம் வித்தியாசமான பரிமாணம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தைப் பார்த்த பிறகே அவரது கதாபாத்திரத்தின் அடுக்குகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அதேபோல், சாய் பல்லவியும் முற்றிலும் மாறுபட்ட, மிகவும் வலிமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லேசான அரசியல் பின்னணியுடன் நகரும் இக்கதையில், தமிழ் ரசிகர்களின் மனதைத் தொடும் வகையிலான ஆழமான உணர்வுப்பூர்வமான கிளைக்கதையும் அழகாக இணைக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் ஓ.ம் திரைப்படம் பற்றிய விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனவே இதன்மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

​

MUST READ