சூர்யாவின் சீன் பட வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 2026ஆம் ஆண்டில் தொடர்ச்சியான வெற்றிகளால் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வரும் நடிகர் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களின் கதைகளிலும் கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்திருந்த சீன் திரைப்படம் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். சூர்யாவுடன் இணைந்து நஸ்ரியா நசீம் மற்றும் நஸ்லேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தில் சூர்யா மற்றும் நஸ்ரியா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதேபோல், வில்லனாக நடித்துள்ள நஸ்லேனின் மிரட்டலான நடிப்பும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது.
இவ்வாறு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படமானது நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் ‘சீன்’ திரைப்படம், ஏற்கனவே உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலை கடந்த நிலையில் வெளியான 10 நாட்களில் ரூ.260 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே இப்படம் வெளியான 12 நாட்களில் கிட்டத்தட்ட ரூ.270 கோடியை நெருங்கியிருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள நிலையில், இந்த வார இறுதிக்குள் தமிழ்நாட்டில் ரூ.100 கோடி வசூல் என்ற மைல்கல்லை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.170 கோடி வசூல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது. தற்போது அந்தப் பிரம்மாண்ட வெற்றி வரிசையில் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படமும் இணைந்து தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் ஒருமுறை தன் ஆதிக்கத்தை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
