Homeசெய்திகள்சினிமாவிறுவிறுப்பான திரைக்கதையில் தனுஷின் 'ஓ.ம்'.... ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு!

விறுவிறுப்பான திரைக்கதையில் தனுஷின் ‘ஓ.ம்’…. ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு!

-

- Advertisement -

தனுஷின் ஓ.ம் படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.விறுவிறுப்பான திரைக்கதையில் தனுஷின் 'ஓ.ம்'.... ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘ஓ.ம்’ வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடையேயும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
​இந்நிலையில், இப்படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் அதிரடி ஆக்சன், குடும்ப சென்டிமென்ட் மற்றும் குடும்ப உறவுகளுக்கு இடையேயான பாசப் பிணைப்பு போன்றவை மிக முக்கியப் பங்கு வகிக்கும் போல் தெரிகிறது.
அதே சமயம் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, இப்படத்தில் நடிகர் தனுஷ் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.விறுவிறுப்பான திரைக்கதையில் தனுஷின் 'ஓ.ம்'.... ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு!​மேலும் ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ள நிலையில் இவரது அர்ப்பணிப்பும் இயக்கமும் இப்படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தது இப்படம் தனுஷின் திரைப்பயணத்தில் மற்றொரு சிறந்த மற்றும் வெற்றிகரமான திரைப்படமாக அமையும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பேசி வருகின்றனர்.
இவ்வாறு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் வகையில் மற்றுமொரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மரக்கடத்தல் கும்பல் அமைப்பிற்குள் ஒரு ரகசிய முகவர் ரகசியமாக ஊடுருவுகிறார். அதே நேரத்தில், அந்த நெட்வொர்க்கை முற்றிலும் அழிக்க ஒரு காவல் துறை அதிரடிப்படை களமிறங்கும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விறுவிறுப்பான திரைக்கதையில் தனுஷின் 'ஓ.ம்'.... ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு! அடுத்தது 2 மணி 58 நிமிடங்கள் 9 வினாடிகள் (178 நிமிடங்கள் 9 வினாடிகள்) என்பது இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும். இது தவிர கதைக்களத்தின் விறுவிறுப்பு குறையாமல் ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் வகையில் இப்படம் தயாராகியுள்ளது. இதனிடையே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ‘ஓ.ம்’ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ