Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போகும் சிம்புவின் அடுத்த பட படப்பிடிப்பு.... இதுதான் காரணமா?

தள்ளிப்போகும் சிம்புவின் அடுத்த பட படப்பிடிப்பு…. இதுதான் காரணமா?

-

- Advertisement -

நடிகர் சிம்புவின் அடுத்த பட படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.தள்ளிப்போகும் சிம்புவின் அடுத்த பட படப்பிடிப்பு.... இதுதான் காரணமா?

நடிகர் சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள அரசன் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வந்த நிலையில் இந்த படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து நடிகர் சிம்பு, ‘டியூட்’ படத்தின் இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. இதில் சிம்பு, போலிஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. மேலும் இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் இதன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருப்பதாகவும் பல தகவல்கள் வெளிவந்தது. ஆனால் தற்பொழுது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.தள்ளிப்போகும் சிம்புவின் அடுத்த பட படப்பிடிப்பு.... இதுதான் காரணமா?அதன்படி இந்த படத்தை தயாரிக்க இருந்த சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. எனவே படக்குழு வேறொரு தயாரிப்பு நிறுவனத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், இதன் காரணமாக இதன் படப்பிடிப்பு 2027 ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாகவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ