Homeசெய்திகள்சினிமாஇது வெறும் தொடக்கம்தான்.... 15 ஆண்டுகால இசைப்பயணம் குறித்து அனிருத் நெகிழ்ச்சி பதிவு!

இது வெறும் தொடக்கம்தான்…. 15 ஆண்டுகால இசைப்பயணம் குறித்து அனிருத் நெகிழ்ச்சி பதிவு!

-

- Advertisement -

இசையமைப்பாளர் அனிருத் தனது 15 ஆண்டுகால இசைப் பயணத்திற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இது வெறும் தொடக்கம்தான்.... 15 ஆண்டுகால இசைப்பயணம் குறித்து அனிருத் நெகிழ்ச்சி பதிவு!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இந்திய அளவில் பிரபலமானவர் அனிருத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய இசையில் எப்போதும் ஒரு தனித்துவமான வைப் மற்றும் எனர்ஜி இருக்கும். அது கேட்பவர்களை உடனடியாகச் சோர்விலிருந்து மீட்டுக் உற்சாகப்படுத்தும். அதே சமயம் அவர் பாடும் போது அவருடைய குரலில் இருக்கும் அசுரத்தனமான ஆற்றல் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும். எனவே தான் கோடான கோடி ரசிகர்கள் இவரை ராக்ஸ்டார் என்று கொண்டாடி வருகின்றனர். சூப்பர் ஹிட் பாடல்களையும் அரங்கத்தை அதிர வைக்கும் பிஜிஎம்-களையும் கொடுத்து அன்று முதல் இன்று வரையிலும் உச்சத்தில் இருக்கும் அனிருத் இன்றுடன் (நவம்பர் 16) தனது பதினைந்து ஆண்டு கால இசைப்பயணத்தை நிறைவு செய்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அனிருத் மிக நீளமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இது வெறும் தொடக்கம்தான்.... 15 ஆண்டுகால இசைப்பயணம் குறித்து அனிருத் நெகிழ்ச்சி பதிவு!

அதில்,
“15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் எங்களுடைய முதல் பாடல் இந்த உலகைச் சென்றடைந்தது. அன்றிலிருந்து இன்று வரை இடைவிடாத, எங்களால் நிறுத்த முடியாத ஒரு பயணமாக இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த 15 ஆண்டுகளில் ஏராளமான இசை, நினைவுகள், கொண்டாட்டங்கள் என பல அற்புதமான தருணங்களைச் சந்தித்திருக்கிறோம். தமிழில் தொடங்கிய எங்களுடைய இசைப் பயணம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளைக் கடந்து இன்று கோடிக்கணக்கான ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது. சர்வதேச அளவிலான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது, பல்வேறு மொழிகளில் பாடல்களை உருவாக்கியது, மிகப்பெரிய வெற்றிப் படங்களில் அங்கம் வகித்தது என இந்தப் பயணம் எங்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுத்துள்ளது.இது வெறும் தொடக்கம்தான்.... 15 ஆண்டுகால இசைப்பயணம் குறித்து அனிருத் நெகிழ்ச்சி பதிவு!

இந்தப் பயணத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி.

ஸ்ட்ரீமிங் தளங்களில் சாதனைகள் படைத்தது முதல் உலகம் முழுவதும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் ரசிகர்களின் அன்பைப் பெற்றது வரை, எங்களுடைய பாடல்களை ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகப் பாடுவதைக் கேட்பது வரை ஒவ்வொரு தருணமும் அற்புதமானது. இசைக்கு எல்லைகள் கிடையாது என்பதை உணர்த்தும் பல தருணங்களைப் பார்த்திருக்கிறோம்.

ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கூட்டணியும், ஒவ்வொரு இசை ஆல்பமும், ஒவ்வொரு மேடை நிகழ்ச்சியும் எங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம். அதிலும் குறிப்பாக 2026-ஆம் ஆண்டு எங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. LIK, ஜனநாயகன், டிசி, பாரடைஸ், ஜெயிலர் 2 எனப் பல முக்கியமான படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 15 ஆண்டுகளைக் கொண்டாட இதைவிட சிறந்த தருணம் இருக்க முடியாது.இது வெறும் தொடக்கம்தான்.... 15 ஆண்டுகால இசைப்பயணம் குறித்து அனிருத் நெகிழ்ச்சி பதிவு!

மேலும், எங்களுடைய புதிய முயற்சியான ‘Albuquerque Records’ மூலம் இசைத்துறைக்கு மீண்டும் ஏதாவது பங்களிக்கவும், அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் விரும்புகிறோம்.

எத்தனையோ சவால்களையும், ஏற்ற இறக்கங்களையும் கடந்து, இசையின் மீதான அதே காதலுடன் தொடர்ந்து பயணித்து வருகிறோம். எங்களுடைய பாடல்களைக் கேட்டவர்கள், பாடல்களுடன் இணைந்து கொண்டாடியவர்கள், எங்களுக்கு ஆதரவளித்தவர்கள் என அனைவருக்கும் இந்தப் பயணத்தில் சமமான பங்கு இருக்கிறது.

15 ஆண்டுகள் கடந்துவிட்டன. எண்ணற்ற நினைவுகள் கிடைத்துள்ளன. இன்னும் பல கனவுகளை நோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது. மீண்டும் இசைக்கூடத்திற்குத் திரும்புகிறோம். இனிமேல்தான் இன்னும் சிறப்பான விஷயங்கள் காத்திருக்கின்றன. இது வெறும் தொடக்கம்தான்!

உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி என அனிருத் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ