Homeசெய்திகள்சினிமா'ஓம்' பட டிரைலர் குறித்து பரவும் செய்தி.... சஸ்பென்ஸை உடைத்த ராஜ்குமார் பெரியசாமி!

‘ஓம்’ பட டிரைலர் குறித்து பரவும் செய்தி…. சஸ்பென்ஸை உடைத்த ராஜ்குமார் பெரியசாமி!

-

- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஓம் பட டிரைலர் குறித்து பரவும் செய்தி பற்றி பேசி உள்ளார்.'ஓம்' பட டிரைலர் குறித்து பரவும் செய்தி.... சஸ்பென்ஸை உடைத்த ராஜ்குமார் பெரியசாமி!

‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஓம். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் ஓம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சென்சார் பிரச்சனை காரணமாக ‘ஓ.எம்’ (O.M) என்று தலைப்பு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில்
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டான நிலையில், படத்தின் கதை மொத்தமும் ட்ரெய்லரிலேயே வெளியாகிவிட்டது போல் இருக்கிறதே என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இப்படத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்தில் நடந்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், ” ‘ஓ.எம்’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பலரும், நாங்கள் படத்தின் கதையை முழுமையாக வெளிப்படுத்திவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், நான் ட்ரெய்லரில் காட்டியது வெறும் கதாபாத்திரங்களின் வளர்ச்சியையும், அந்த உலகத்தையும் மட்டுமே தவிர கதை அல்ல,” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் படத்தின் சஸ்பென்ஸ் குறித்துப் பேசிய ராஜ்குமார், “தனுஷ் சாரின் கதாபாத்திரம் உண்மையில் என்ன என்பதை திரையில் பார்த்து நீங்களே யூகித்துக் கொள்ளலாம். குறிப்பாக, கதையில் வரும் ‘மோல்’ (ஒற்றன்) கதாபாத்திரம் மம்மூட்டி தரப்பில் இருக்கிறதா? அல்லது போலீஸ் தரப்பில் இருக்கிறதா? என்பது எந்தப் பக்கமும் இருக்கலாம். அதைப் படத்தைப் பார்த்துக் தெரிந்து கொள்ளுங்கள்!” என்று சுவாரசியமான சஸ்பென்ஸை உடைத்துள்ளார்.
இயக்குநரின் இந்தப் பேச்சு ‘ஓ.எம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பையும், கதை குறித்த யூகங்களையும் ரசிகர்களிடையே உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

 

MUST READ