Homeசெய்திகள்சினிமாஇதுல மம்மூட்டி கேரக்டர் ரொம்ப முக்கியமானது.... 'ஓம்' படம் குறித்து ராஜ்குமார் பெரியசாமி!

இதுல மம்மூட்டி கேரக்டர் ரொம்ப முக்கியமானது…. ‘ஓம்’ படம் குறித்து ராஜ்குமார் பெரியசாமி!

-

- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஓம் படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

‘அமரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு இந்திய அளவில் நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அவர் அடுத்ததாக தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகிய முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ஓ.எம்’ (O.M). இந்த படத்திற்கு ஆரம்பத்தில் ஓம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சென்சார் பிரச்சனை காரணமாக ஓ.எம் என்று மாற்றப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் கதை ஓம் என்பதைச் சுற்றி தான் நகரும் போல் தெரிகிறது. மேலும் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் இருந்து வருகிறது.இதுல மம்மூட்டி கேரக்டர் ரொம்ப முக்கியமானது.... 'ஓம்' படம் குறித்து ராஜ்குமார் பெரியசாமி!​வருகிற நவம்பர் 20-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், அதற்கான புரொமோஷன் பணிகள் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, அடுத்தடுத்து வெளியான பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளன. அடுத்தது இப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் மிகவும் வலிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
​அதன்படி, படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திரம் குறித்துப் பேசிய அவர், “இப்படத்தில் மம்மூட்டி சாரின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. கதையோடு சேர்ந்து அவர் பயணிப்பார். இந்தக் கதையின் தொடக்கத்தில் இருந்தே இந்தக் கதாபாத்திரம் இருந்து வருகிறது. நீங்கள் அனைவரும் நிச்சயம் அவரின் கதாபாத்திரத்தை எதிர்பார்க்கலாம்,” என்று தெரிவித்துள்ளார்.இதுல மம்மூட்டி கேரக்டர் ரொம்ப முக்கியமானது.... 'ஓம்' படம் குறித்து ராஜ்குமார் பெரியசாமி!
​மேலும், தனுஷ் மற்றும் சாய் பல்லவி குறித்துப் பேசிய ராஜ்குமார் பெரியசாமி, “தனுஷ் சாரின் படங்களுக்கு நீங்கள் எப்போதுமே மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்து வருகிறீர்கள். அதேபோல இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும். மலையாளத் திரைப்படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கிய சாய் பல்லவி, இப்படத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்,” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 

MUST READ