Homeசெய்திகள்சினிமாலோக்கல் மோடுக்கு மாறும் ஜூனியர் என்டிஆர்.... புதிய படம் குறித்த அப்டேட்!

லோக்கல் மோடுக்கு மாறும் ஜூனியர் என்டிஆர்…. புதிய படம் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

ஜூனியர் என்டிஆரின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.லோக்கல் மோடுக்கு மாறும் ஜூனியர் என்டிஆர்.... புதிய படம் குறித்த அப்டேட்!

தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஜூனியர் என்டிஆர், தனது அசாத்தியமான நடிப்பாலும், துள்ளலான நடனத்தாலும் தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா முழுவதும் ‘மேன் ஆஃப் மாஸஸ்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘தேவரா’ ஆகிய திரைப்படங்கள் ஜூனியர் என்டிஆருக்கு மிகப்பெரிய வெற்றியையும், பான்-இந்தியா அளவில் அசைக்க முடியாத இடத்தையும் பெற்றுத் தந்துள்ளன.
​இந்த வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, ஜூனியர் என்டிஆர் தற்போது ‘கே.ஜி.எஃப்’ படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘டிராகன்’ என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2027 ஜூன் 11-ஆம் தேதி இப்படத்தை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
​இதற்கு அடுத்தபடியாக, பிரபல இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவும் ஜூனியர் என்டிஆர் ஒப்பந்தமாகியுள்ளார். காட் ஆப் வார் என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஏற்கனவே கைவிடப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. லோக்கல் மோடுக்கு மாறும் ஜூனியர் என்டிஆர்.... புதிய படம் குறித்த அப்டேட்!இப்படி பிரம்மாண்ட பான்-இந்தியா படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஜூனியர் என்டிஆர், தற்போது அடுத்ததாகத் கமர்ஷியல் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அனில் ரவிபுடி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
​தொடர்ந்து பான்-இந்தியா ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்த ஜூனியர் என்டிஆர், அனில் ரவிபுடியின் இயக்கத்தில் முழுக்க முழுக்கக் குடும்ப ரசிகர்களைக் கவரும் ‘லோக்கல் ஹீரோ’ ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ