Homeசெய்திகள்சினிமாமதுரை நகைக்கடை கொள்ளை விவகாரம்.... ஒரே தவறால் வீணான நற்பெயரும் ரசிகர்களின் நம்பிக்கையும்!

மதுரை நகைக்கடை கொள்ளை விவகாரம்…. ஒரே தவறால் வீணான நற்பெயரும் ரசிகர்களின் நம்பிக்கையும்!

-

- Advertisement -

சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் பிரபலமாகும் நபர்களுக்கு, இன்று சினிமா மற்றும் சீரியல் வாய்ப்புகள் வரை எளிதில் கிடைக்கின்றன.மதுரை நகைக்கடை கொள்ளை விவகாரம்.... ஒரே தவறால் வீணான நற்பெயரும் ரசிகர்களின் நம்பிக்கையும்! தங்களின் தனித்துவமான வீடியோக்கள் மூலம் தங்களுக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் பல இன்ஃப்ளூயன்சர்கள், திரையுலகிலும் தடம் பதித்து வருகின்றனர். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேகரித்து வைத்திருந்தவர் மீனாட்சி நாச்சியார். இவர் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மட்டுமல்லாமல் முன்னாள் ‘டெக் பாஸ்’ (TechBoss) ஊழியருமாவார். இவர் தற்போது மதுரையில் நகைக்கடை கொள்ளை வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்க நகைகள் மற்றும் 4 கிலோ வைர ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் கொள்ளைச் சம்பவம் குறித்து தனிப்படைகள் அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வந்த மதுரை மாநகர காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் துப்பு துலக்க தொடங்கினார். கடந்த நவம்பர் 5-ஆம் தேதி நகைக்கடையிலிருந்து சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் 4 கிலோ வைர ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், இக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட முக்கிய நபரான யூடியூபர் நிஷாந்த் என்பவருக்கு உடந்தையாக இருந்து நகைகளைப் பதுக்கி வைக்க உதவியதாகக் கூறி, மீனாட்சி நாச்சியார் மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.மதுரை நகைக்கடை கொள்ளை விவகாரம்.... ஒரே தவறால் வீணான நற்பெயரும் ரசிகர்களின் நம்பிக்கையும்!இத்தனை நாட்களாகச் சமூக வலைதளங்களில் தனது திறமையால் நல்ல பெயரைச் சம்பாதித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த மீனாட்சி நாச்சியாரின் இந்தச் செயல், அவரைப் பின்தொடரும் ஃபாலோவர்ஸ்களைப் பெரும் அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த ஒரே ஒரு தவறால் அவர் இதுவரை சம்பாதித்த நற்பெயர் அனைத்தும் வீணாகிப் போயுள்ளதோடு, சமூக வலைதளங்களில் அவரை நம்பிப் பின்தொடர்ந்த ரசிகர்களின் மனநிலையையும் இது வெகுவாகப் பாதித்துள்ளது.

 

MUST READ