விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்திலிருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி, தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் விஜய் ஆண்டனி. அதன் பிறகு நடிகராகக் களமிறங்கிய அவருக்கு, ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியையும், மக்களிடம் மிகுந்த நற்பெயரையும் பெற்றுத் தந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, வித்தியாசமான கதைக்களங்களையும், அழுத்தமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
அந்த வகையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அப்பா குட்டி’. ‘பிளாக் மெயில்’ படத்தின் இயக்குநர் மு. மாறன் இப்படத்தை இயக்கியுள்ளார். அப்பா மற்றும் மகள் ஆகிய இருவருக்குமான ஆழமான பாசப் போராட்டத்தை மையமாக வைத்து உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரீத்தி அஸ்ராணி, முத்துக்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
#AppaKutty 3rd single loading ♥️
#NeedhaneEnKannadi music video from Monday 💥
A beautifully imagined song about fatherhood song coming your way ❤️🔥
Written & Directed by: @mumaran1
A @Vijayantony Musical 🎵
@mrsvijayantony @vijayantony
@haripriyaa_off @actorbucks @Aruvimadhan @actormuthukumar @dhivakargj @lizzieantony @MunnarRamesh @748b733cebe946f @sugaa14 @puthiyaparithi @mahesh25071985 #thamuruganandam @cinemapayyan @ProRekha @PROSaiSatish#AppaKuttyFromNov20
— vijayantony (@vijayantony) November 14, 2026
விஜய் ஆண்டனியே இப்படத்தைத் தயாரித்து இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான பாடல்களும், ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளன. இந்நிலையில், இப்படத்திலிருந்து ‘நீதானே என் கண்ணாடி’ என்ற வீடியோ பாடல் நாளை (நவம்பர் 16-ஆம் தேதி, திங்கட்கிழமை) வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த படமானது வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
