கோவாவில் நடைபெறவுள்ள 57-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் (International Film Festival of India), இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடுவதற்காக நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
57-ஆவது கோவா சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 86 நாடுகளைச் சேர்ந்த 159 சர்வதேசத் திரைப்படங்களும், 76 இந்தியத் திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன.
இந்தியத் திரைப்படங்களின் சிறந்த படைப்புகளை உலக அளவில் அறிமுகப்படுத்துவதுடன், இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் திரைப்படக் கலைத்திறனை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், இந்தியன் பனோரமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
அந்த வகையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இதன் மூலம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேசத் திரைப்பட ரசிகர்களின் பார்வைக்கு ‘தாய் கிழவி’ திரைப்படம் செல்ல உள்ளது.
ஜப்பானில் சூர்யா 48 படப்பிடிப்பு! – டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படம்
