நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புப் பணிகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

அதிரடி ஆக்சன் கதையில் ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமாக உருவாகும் ‘தர்மன்’ படத்தில் அவர் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்கிறார். சண்டைக் காட்சிகளை அன்பறிவ் சகோதரர்கள் அமைக்கின்றனர்.
அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் படக்குழு
ஏற்கனவே இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. தொடர்ந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்றது. அதன்பிறகு மைசூருவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, படத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ரஜினிகாந்தின் ஸ்டைலும், அஷ்வத் மாரிமுத்துவின் இயக்கமும் இணைவதால் ‘தர்மன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரஜினி – கமல் கூட்டணி
இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சம், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பாளராக இணைந்திருப்பதுதான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இரு திரை ஜாம்பவான்களும் ஒரே திரைப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘தர்மன்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டாரின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
