Homeசெய்திகள்சினிமாவிமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் சரவெடியாய் வெடிக்கும் 'ராமாயணா'!

விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் சரவெடியாய் வெடிக்கும் ‘ராமாயணா’!

-

- Advertisement -

ராமாயணா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அப்டேட் வெளியாகியுள்ளது.விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் சரவெடியாய் வெடிக்கும் 'ராமாயணா'!

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ரன்பீர் கபூர் ஏற்கனவே பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், கடந்த 2023-ல் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிக்குவித்து அவருக்கு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தற்போது ‘லவ் அண்ட் வார்’, ‘அனிமல் பார்க்’ போன்ற பிரம்மாண்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார் ரன்பீர் கபூர். இதற்கிடையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு படைத்து வருகிறது.
இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், நடிகை சாய் பல்லவி சீதையாகவும், கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். பல முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் வெளியான இப்படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதே சமயம், படத்தின் திரைக்கதை சற்று மெதுவாக நகர்வதாகப் பலரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் சரவெடியாய் வெடிக்கும் 'ராமாயணா'!இருப்பினும், அந்த விமர்சனங்களையும் தாண்டி வெளியான சில நாட்களிலேயே உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூலித்து இப்படம் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இப்படம் முதல் 8 நாட்களில் ரூ. 1060 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் இந்த படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

 

MUST READ