அன் ஆர்டினரி மேன் படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக கோடிகளில் சம்பாதிக்கும் யோகி பாபு, அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருவதோடு, தற்போது பல படங்களில் கதாநாயகனாகவும் தன் திறமையை நிரூபித்து வருகிறார். அந்த வகையில், தற்போது இவரின் நடிப்பில் உருவாகி வரும் சுவாரஸ்யமான திரைப்படம் தான் ‘அன் ஆர்டினரி மேன்’.
ரவி மோகன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு கெனிஷா இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தின் ஒளிப்பதிவுப் பணியை விவியன் ஆம்பரோஸ் கவனித்து வருகிறார். இந்த படமானது காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி வருவது போன்று தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் ரவி மோகன் இயக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவினர் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் போஸ்டர்கள் மற்றும் புரோமோ வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அந்த வரிசையில், தற்போது இப்படத்திலிருந்து ‘லார்டா லபக்கா’ என்ற புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை சித்தார்த்தும், மன்னார் முத்துவும் இணைந்து பாடியுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.
