Homeசெய்திகள்சினிமாமாறுபட்ட கதாபாத்திரங்களின் தேர்வு - கச்சிதமாக காயை நகர்த்தும் ரெஜினா!

மாறுபட்ட கதாபாத்திரங்களின் தேர்வு – கச்சிதமாக காயை நகர்த்தும் ரெஜினா!

-

- Advertisement -

நடிகை ரெஜினாவின் கதாபாத்திரங்களின் தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.மாறுபட்ட கதாபாத்திரங்களின் தேர்வு - கச்சிதமாக காயை நகர்த்தும் ரெஜினா!

​திரைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் பெரிய அளவிலான வலுவான கதாபாத்திரங்கள் அமையவில்லை என்றாலும், தனது திறமையால் தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.
​தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தனது சினிமா பயணத்தில் மிகச் சரியான திட்டமிடலோடு காய்களை நகர்த்தி வருகிறார். குறிப்பாக, அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத சவாலான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, சமீபத்தில் பிரம்மாண்டமாக தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திலும் மிரட்டலான நெகட்டிவ் ரோலில் களம் இறங்கி அசத்தியுள்ளார்.மாறுபட்ட கதாபாத்திரங்களின் தேர்வு - கச்சிதமாக காயை நகர்த்தும் ரெஜினா! ​இப்படி நெகட்டிவ் ரோல்களுக்குப் பிறகு, அடுத்தபடியாக ‘ஆர்.எக்ஸ்’ (RX) திரைப்படத்தில் மிக முக்கியமான லீட் ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தில் மிகவும் சிம்பிளான தோற்றத்தில் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற இயல்பான கதாபாத்திரத்தில் வலம் வரவுள்ளார் ரெஜினா. இவ்வாறு தனது அடுத்தடுத்த படங்களில் ​ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ரெஜினாவிற்கு இந்த ஆர் எக்ஸ் திரைப்படம் சினிமா கேரியரில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுமா? இந்தத் திரைப்படம் இவருக்கு எந்தளவிற்கு ஒரு பெரிய வெற்றிப் படமாக அமையப் போகிறது? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.மாறுபட்ட கதாபாத்திரங்களின் தேர்வு - கச்சிதமாக காயை நகர்த்தும் ரெஜினா!விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகும் ஆர் எக்ஸ் திரைப்படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் ஜி ஸ்குவாட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

 

MUST READ