நடிகர் மணிகண்டனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘விக்ரம் வேதா’, ‘காலா’ போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய நடிகர் மணிகண்டன், அதனைத் தொடர்ந்து ‘குட் நைட்’, ‘லவ்வர்’ மற்றும் ‘குடும்பஸ்தன்’ ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார். அதைத்தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மணிகண்டன். இவருடைய எதார்த்தமான நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில் இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இவர்தான் நடிப்பில் உருவாகி இருக்கும் மக்கள் காவலன் திரைப்படத்தை வருகின்ற டிசம்பர் 4 அன்று திரையரங்குகளில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் மணிகண்டனின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் மணிகண்டன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான மிஷ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
