Homeசெய்திகள்சினிமாஃபேக் டைட்டில் ரகசியம்.... 'சீன்' படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேட்டி!

ஃபேக் டைட்டில் ரகசியம்…. ‘சீன்’ படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேட்டி!

-

- Advertisement -

இயக்குனர் ஜித்து மாதவன் சீன் படத்தின் ஃபேக் டைட்டில் குறித்து பேசி உள்ளார்.ஃபேக் டைட்டில் ரகசியம்.... 'சீன்' படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேட்டி!

2026-ஆம் ஆண்டில் அடுத்தடுத்து மூன்று மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ள நடிகர் சூர்யா, இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக ‘சீன்’ படத்தின் மூலம் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக உருவெடுத்துள்ளார். அதாவது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான சீன் திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே அதிக வசூலைக் குவித்து புதிய சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
​சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இதில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லேன் உள்ளிட்டோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர். நடிகர் சூர்யாவுக்கும், அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய லாபத்தைத் தேடித்தந்துள்ளது.
​முன்னதாக ‘ஆவேசம்’ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதேபோல் ஒரே தலைப்பை படத்தில் இரண்டு வெவ்வேறு அர்த்தங்களில் இரண்டு முறை பயன்படுத்துவது ரசிகர்களுக்கு ஒரு புதிய மற்றும் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தரும் வகையில் இயக்குநர் ஜித்து மாதவன் சிறப்பாகக் காட்டி காட்டி இருந்தார். இது போன்ற பல ட்விஸ்ட்களின் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் திரையரங்குகளில் முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளது.

we-r-hiring

​இந்நிலையில், படத்தின் வெற்றிக்குப் பிறகு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், இப்படத்தின் ஃபேக் டைட்டில் மற்றும் தலைப்புத் தேர்வு குறித்த சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு, படத்திற்கு ஏற்ற சரியான தலைப்பைத் தேடியபோதுதான் எங்களுக்கு ‘SCENE’ மற்றும் ‘SEEN’ என்ற யோசனை வந்தது. ஒரே தலைப்பை படத்தில் இரண்டு வெவ்வேறு அர்த்தங்களில் இரண்டு முறை பயன்படுத்துவது எனக்கு மிகவும் உற்சாகமளிப்பதாக இருந்தது. நாங்கள் உணர்ந்த அந்த சுவாரஸ்யமும் உற்சாகமும் திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் அப்படியே சென்று சேரும் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

MUST READ