Homeசெய்திகள்சினிமாஅசுரனை விட 'அரசன்' மாஸா இருக்கும்.... ஸ்டண்ட் மாஸ்டர் ஓபன் டாக்!

அசுரனை விட ‘அரசன்’ மாஸா இருக்கும்…. ஸ்டண்ட் மாஸ்டர் ஓபன் டாக்!

-

- Advertisement -

அரசன் படம் குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் பேட்டி அளித்துள்ளார்.அசுரனை விட 'அரசன்' மாஸா இருக்கும்.... ஸ்டண்ட் மாஸ்டர் ஓபன் டாக்!

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. அனிருத் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் சந்தீப் ரெட்டி வங்கா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து வரும் நிலையில், இதன் ஆக்ஷன் காட்சிகள் குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் வெளியிட்ட தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அதன்படி அவர், “சண்டைக் காட்சிகளைப் பொறுத்தவரை, ‘அரசன்’ திரைப்படம் வெற்றிமாறன் சாரின் முந்தைய படங்களான ‘அசுரன்’ திரைப்படத்தை விடப் பல மடங்கு மாஸாக இருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். ‘அரசன்’ படத்தின் சண்டைக் காட்சிகள் ‘அசுரன்’ மட்டுமின்றி, ‘விடுதலை பாகம் 1’, ‘விடுதலை பாகம் 2’ மற்றும் ‘வடசென்னை’ ஆகிய அனைத்து படங்களின் ஆக்ஷன் காட்சிகளையும் மிஞ்சும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

we-r-hiring

நாங்கள் இன்னும் கிளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கவில்லை. ஆனால் இயக்குநர் வெற்றிமாறன் சார் அந்த ஐடியாவை என்னிடம் விவரித்த போதே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. அது அந்த அளவிற்கு மிகப்பெரிய அளவில் உருவாகவுள்ளது. அதனால் ‘அசுரன்’ படத்தை விட இது மிகப்பிரம்மாண்டமாக இருக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். நான் ‘வடசென்னை’ படத்தில் பணியாற்றவில்லை என்றாலும், ‘அசுரன்’ படத்திலிருந்து வெற்றிமாறன் சாருடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அதனால் நான் பார்த்தது மற்றும் கேட்டதை வைத்துப் பார்க்கும்போது, ‘அரசன்’ படத்தின் சண்டைக் காட்சிகள் இந்த அனைத்து படங்களையும் மிஞ்சிவிடும் என்று நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறனின் முந்தைய மாஸ் வெற்றிப் படங்களை விட ‘அரசன்’ படத்தின் ஆக்ஷன் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் எனப் பீட்டர் ஹெயின் கூறியுள்ளது சிம்பு ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

MUST READ