Homeசெய்திகள்சினிமாமூன்று வித்தியாசமான தோற்றங்களில் லெஜண்ட் சரவணன்.... பிரபல இயக்குனருடன் கூட்டணி!

மூன்று வித்தியாசமான தோற்றங்களில் லெஜண்ட் சரவணன்…. பிரபல இயக்குனருடன் கூட்டணி!

-

- Advertisement -

லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.மூன்று வித்தியாசமான தோற்றங்களில் லெஜண்ட் சரவணன்.... பிரபல இயக்குனருடன் கூட்டணி!

‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். படம் வெளியானபோது இணையத்தில் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தபோதிலும், திரையுலகில் நாயகனாகச் சாதிக்க வேண்டும் என்ற அவரது முயற்சி தொடர்ந்தது.
அதன்படி தனது உடல்மொழி மற்றும் தோற்றத்தில் முற்றிலும் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்து அடுத்த திரைப்படத்தில் களமிறங்கினார். இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான லீடர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுத்தந்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் அவர் நடித்த ஆக்ஷன் காட்சிகளும் ஸ்டைலிஷான தோற்றமும் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், லெஜண்ட் சரவணன் தனது அடுத்த புதிய திரைப்படத்தின் மூலம் மீண்டும் பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டத் தயாராகிவிட்டதாக ஒரு அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ திரைப்படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இந்த புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மூன்று வித்தியாசமான தோற்றங்களில் லெஜண்ட் சரவணன்.... பிரபல இயக்குனருடன் கூட்டணி!மேலும், இப்படத்தில் லெஜண்ட் சரவணன் முதன்முறையாக மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்தது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலேயே அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களுடன் களமிறங்கும் லெஜண்ட் சரவணனின் இந்த புதிய மாஸ் கூட்டணி அப்டேட் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ