Homeசெய்திகள்சினிமாஜித்து மாதவன் - துல்கர் சல்மான் கூட்டணியில் இணையும் பிரபல நடிகை!

ஜித்து மாதவன் – துல்கர் சல்மான் கூட்டணியில் இணையும் பிரபல நடிகை!

-

- Advertisement -

ஜித்து மாதவன் – துல்கர் சல்மான் கூட்டணி பிரபல நடிகை இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜித்து மாதவன் - துல்கர் சல்மான் கூட்டணியில் இணையும் பிரபல நடிகை!

‘ரோமாஞ்சம்’ மற்றும் ‘ஆவேசம்’ போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்றவர் இயக்குநர் ஜித்து மாதவன். இவர் சூர்யா, நஸ்ரியா மற்றும் நஸ்லேன் கூட்டணியில் இயக்கிய ‘சீன்’ திரைப்படம் கடந்த நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
​’சீன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜித்து மாதவன் என்ன படம் இயக்குகிறார்? யாரை வைத்து இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இது தொடர்பாக சமீபத்தில் புதிய தகவல் ஒன்று வெளியானது. அதன்படி இயக்குனர் ஜித்து மாதவன் தனது அடுத்த திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர் துல்கர் சல்மானை நடிக்க வைக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
​இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் ஒரு புதிய அப்டேட் கசிந்துள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகை மமிதா பைஜு ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜித்து மாதவன் - துல்கர் சல்மான் கூட்டணியில் இணையும் பிரபல நடிகை!‘பிரேமலு’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்த மமிதா பைஜு, டியூட், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேகரித்து வைத்துள்ளார். இவர் அடுத்ததாக துல்கர் சல்மானுடன் முதன்முறையாக கைகோர்க்கவுள்ளது இப்படத்தின் மீதான ஆர்வத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. மேலும்
​ஜித்து மாதவனின் இந்த புதிய படமானது மாறுபட்ட திரைக்கதையில் அதிரடி ஆக்சன் கலந்த கமர்சியல் படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படக்குழுவினர் பற்றிய முழுமையான விவரங்களும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ