Homeசெய்திகள்சினிமாதீவிர ஆலோசனையில் அஜித் - எச். வினோத் ..... மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி?

தீவிர ஆலோசனையில் அஜித் – எச். வினோத் ….. மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி?

-

- Advertisement -

அஜித் மற்றும் எச். வினோத் கூட்டணி மீண்டும் இணைய போவதாக தகவல் கசிந்துள்ளது.தீவிர ஆலோசனையில் அஜித் - எச். வினோத் ..... மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி?

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகரான அஜித் குமார், தனது கார் பந்தயங்களை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், வரும் நவம்பர் 12-ஆம் தேதி முதல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அஜித் குமார் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணி குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, மற்றும் ‘துணிவு’ ஆகிய மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.தீவிர ஆலோசனையில் அஜித் - எச். வினோத் ..... மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி?இந்நிலையில், சமீபத்தில் அஜித் குமாரை சந்தித்த இயக்குநர் எச். வினோத், ஒரு புதிய ஒன்-லைன் கதையைக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அந்த கதையைக் கேட்ட அஜித், ரெஃபரன்ஸுக்காக ஒரு பிரபல ஹாலிவுட் திரைப்படத்தைப் பார்க்குமாறு வினோத்திற்குப் பரிந்துரைத்துள்ளாராம். சமூகப் பொறுப்புள்ள கருத்து நிறைந்த ஒரு கேங்ஸ்டர் கதையாக இது உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது முதற்கட்ட பேச்சாவார்த்தைகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், இக்கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தும்.

MUST READ