Homeசெய்திகள்சினிமாநான் ஒரு அண்டர்டாக்.... மாஸாக பேசி அரங்கத்தை அதிர வைத்த தனுஷ்!

நான் ஒரு அண்டர்டாக்…. மாஸாக பேசி அரங்கத்தை அதிர வைத்த தனுஷ்!

-

- Advertisement -

தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படம் வரும் 20-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட நிலையில், திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.நான் ஒரு அண்டர்டாக்.... மாஸாக பேசி அரங்கத்தை அதிர வைத்த தனுஷ்!இதனிடையே, நடிகர் தனுஷ் விரைவில் அரசியலில் களமிறங்கப்போவதாகச் சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரத்திலும் பல்வேறு தகவல்கள் தீவிரமாகப் பரவி வருகின்றன. இந்தச் சூழலில் இன்று (நவம்பர் 6ஆம் தேதி) நடைபெறும் ‘ஓம்’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், தனது ரசிகர்கள் மற்றும் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்துப் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் தனது ரசிகர்களுக்காகப் பேசிய தனுஷ், “என் ரசிகர்களுக்காக இதைச் சொல்கிறேன். நிறைய நல்ல திட்டங்களை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் என் பணத்தைச் செலவழிக்கவில்லை, நீங்கள் உங்கள் சொந்தப் பணத்தில் என் பெயரில் நற்பணிகளைச் செய்கிறீர்கள். எனக்கு ஒரே ஒரு கோரிக்கைதான், உங்கள் குடும்பத் தேவைக்கு அதிகமான பணம் இருந்தால் மட்டும் இதைச் செய்யுங்கள். எந்தச் சூழலிலும் உங்கள் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது” என்று அன்புக்கட்டளை விடுத்தார்.நான் ஒரு அண்டர்டாக்.... மாஸாக பேசி அரங்கத்தை அதிர வைத்த தனுஷ்!தொடர்ந்து பேசிய அவர், “இன்னொரு கோரிக்கை, உங்களிடம் கேட்கலாம் அல்லவா? நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைக்காலம் வரும். நாம் அதைக் கடந்துவிட்டால் சந்தோஷம். ஒருவேளை மழை பாதிப்பு இருந்தால், நீங்கள் மக்களுக்கு முன்னின்று உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். மேலும், தன் மீதான விமர்சனங்கள் மற்றும் அரசியல் தகவல்கள் பரவி வரும் நிலையில், ‘அண்டர்டாக்’ (Underdog) கான்செப்ட் குறித்துப் பேசிய தனுஷ், “என் வாழ்நாள் முழுவதும் நான் ஒரு அண்டர்டாக்காகவே இருந்துள்ளேன். என்னை மிகவும் குறைவாக எடைபோடுவார்கள், மட்டம் தட்டுவார்கள். ஆனால் ஒன்று, அவர்கள் என்னை எந்தளவுக்குக் குறைவாக எடைபோட்டு மட்டம் தட்டுகிறார்களோ, அவ்வளவுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே என்னை மோட்டிவேட் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு அண்டர்டாக்காக இருந்து ஜெயிக்கிறதில் ஒரு தனி கிக் இருக்கிறது” என்று மாஸாகப் பேசி அரங்கத்தை அதிர வைத்தார்.

MUST READ