அஜித் நடிக்கும் டேர் டெவில் படத்தின் பூஜை வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார், தற்போது கார் பந்தயத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அதேசமயம் முழுவீச்சில் தனது அடுத்த கட்ட சினிமா பயணத்திலும் களமிறங்கியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘டேர் டெவில்’ என அதிகாரப்பூர்வமாகத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்டமான பூஜை விழா சமீபத்தில் நடைபெற்றதுடன், அதன் பூஜை வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
படத்தின் தயாரிப்பாளரான ஷாலினி அஜித்குமார் அவர்கள் இந்தத் திரைப்படத்தின் பூஜையைத் தொடங்கி வைத்துள்ளார். தற்போது கிடைத்த தகவல்களின்படி, இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பூஜை கிளிம்ஸ் வீடியோவை அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
இப்படத்தில் அஜித்குமாருடன் இணைந்து நடிக்கும் நடிகர் பட்டாளமும் மிக வலுவாக உள்ளது.
A glimpse of the #DareDevil Pooja Ceremony! 🎬
#AjithKumar #Daredevil #ShaliniAjithKumar #DareDevilPooja@Braveheartsprod @Adhikravi @anirudhofficial
@Iamunnimukundan
@sreeleela14
@rparthiepan @suneeltollywood
@SureshChandraa @AbinandhanR @editorvijay @supremesundar #Subbhunaarayan @itsanuvardhan @kayoas13 @valentino_suren @Donechannel1 @AbdulNassarOffl @AMBANINSK @riseandroar_inc @directorsiva @ARMurugadoss @vp_offl @dirsaran #DirectorSelva #RajKapoor #HVinoth #Vijay #ChozhaPonnurangam @SathyaJyothi @theVcreations @gkmtamilkumaran @iamVikramPrabhu @shamleeofficial @aktxt @richardrishi— Suresh Chandra (@SureshChandraa) November 6, 2026

அதன்படி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான பார்த்திபன் மற்றும் பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகை ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகவுள்ள ‘டேர் டெவில்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் மீண்டும் ஒரு மிரட்டலான ஆக்ஷன் விருந்து காத்துக்கொண்டிருக்கிறது.
