Homeசெய்திகள்சினிமா'சூர்யா சாருடன் நடித்தது ஒரு கனவு போன்ற தருணம்'... 'சீன்' பட வில்லன் நெகிழ்ச்சி!

‘சூர்யா சாருடன் நடித்தது ஒரு கனவு போன்ற தருணம்’… ‘சீன்’ பட வில்லன் நெகிழ்ச்சி!

-

- Advertisement -

சீன் பட வில்லன் நஸ்லேன், சூர்யா குறித்து பேசி உள்ளார்.

மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் மலையாள இளம் நடிகர் நஸ்லேன். இவர் தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ (Scene) திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஜித்து மாதவன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படமானது வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வர தயாராக வருகிறது. எனவே படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி சீன் படம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
நஸ்லேன், நடிகர் சூர்யா குறித்து பேசி உள்ளார்.'சூர்யா சாருடன் நடித்தது ஒரு கனவு போன்ற தருணம்'... 'சீன்' பட வில்லன் நெகிழ்ச்சி! அவர் பேசியதாவது, “சீன்’ திரைப்படத்தில் சூர்யா சாருடன் இணைந்து நடித்தது எனக்கு ஒரு மறக்க முடியாத கனவு போன்ற தருணம். நான் மலையாளத்தில் ‘லோகா’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்கு இந்த ‘சீன்’ பட வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பாகவே எனக்குத் தமிழிலிருந்து சில பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் என்றதும் அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. சூர்யா சார் மிகவும் கட்டுக்கோப்பான ஒரு நடிகர் மற்றும் மிகச் சிறந்த கலைஞர். இந்தப் படத்தில் எனக்கு இருந்த ஒரே மிகப்பெரிய பயம் தமிழ் பேசுவதுதான்” என்று நஸ்லேன் தெரிவித்துள்ளார்.'சூர்யா சாருடன் நடித்தது ஒரு கனவு போன்ற தருணம்'... 'சீன்' பட வில்லன் நெகிழ்ச்சி!மலையாளத்தில் முன்னணி இளம் நடிகராக வலம் வரும் நஸ்லேன், ‘சீன்’ படம் மூலம் தமிழில் முதன்முறையாக வில்லன் அவதாரம் எடுத்திருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியிலும், குறிப்பாக சூர்யா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ