Homeசெய்திகள்சினிமா'மொத ராத்திரி' பார்ட் 2 வரப்போகுது.... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

‘மொத ராத்திரி’ பார்ட் 2 வரப்போகுது…. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

-

- Advertisement -

‘மொத ராத்திரி பாகம் 2 குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.'மொத ராத்திரி' பார்ட் 2 வரப்போகுது.... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, சினிமா பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘மொத ராத்திரி’.
​பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், நகைச்சுவை கலந்த ஒரு குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக அமைந்தது. பரத் சங்கரின் இசையமைப்பும், சுரேந்திரன் பரஞ்சோதியின் ஒளிப்பதிவும் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்தன.
​இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தனர். மேலும் சேத்தன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டினர்.'மொத ராத்திரி' பார்ட் 2 வரப்போகுது.... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!​பழம்பெரும் இயக்குநர் கே. பாக்யராஜின் பாணியிலான விறுவிறுப்பான மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதையை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்த இத்திரைப்படம், எதார்த்தமான நகைச்சுவைக் காட்சிகளால் குடும்ப ஆடியன்ஸின் பாராட்டுகளைப் பெற்றது.
​இந்நிலையில், இயக்குநர் ராஜா கருப்பசாமி, மொத ராத்திரி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அப்டேட் கொடுத்துள்ளார்.
​முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக ஆதரவைத் தொடர்ந்து, ‘மொத ராத்திரி 2’ படத்திற்கான கதையமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இது முதல் பாகத்தை விடவும் கூடுதல் சிரிப்பு வெடியுடன் அமையும் என்றும் ரசிகர்களால் நம்பப்படுகிறது.

MUST READ