இசையமைப்பாளர் சாய் அபியங்கரின் பிறந்தநாள் சிறப்பு பதிவு
திரைத்துறையில் தனித்துவமான பாடல்கள் மூலம் தனது இசைப் பயணத்தைத் தொடங்கி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு ரசிகர்களின் மனதையும் சுண்டி இழுத்தவர் சாய் அபியங்கர். இவரின் இசையைக் கேட்டாலே கேட்பவர்களுக்குள் மின்சாரம் பாய்ந்தது போன்ற ஒரு புதிய புத்துணர்ச்சியும், அசுர எனர்ஜியும் தானாகவே வந்து தொற்றிக்கொள்கிறது. இவரின் இந்தத் துள்ளலான குரலும் புதுமையான இசையமைப்பும் குறுகிய காலத்திலேயே இணையத்தில் வைரலாகி, திரையுலகில் இவருக்கென ஒரு தனி முத்திரையை உருவாக்க வைத்தது.
குறிப்பாக, ‘டியூட்’ திரைப்படத்தில் இவரின் பிரம்மாண்ட பின்னணி இசையும், நெஞ்சைத் தொடும் பாடல்களும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களைச் சம்பாதித்துக் கொடுத்தன. அதனைத் தொடர்ந்து இவர் வெளியிட்ட அடுத்தடுத்த ஆல்பம் பாடல்கள் மூலம் இளைஞர்களின் வரப்பிரசாதமாக மாறி, திரையுலகின் பிற முன்னணி இசையமைப்பாளர்களுக்கே சவாலாக அமையும் வகையில் மாபெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் வரிசையாக ஒப்பந்தமாகி, உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் இவரது கைவசம் பிரம்மாண்டமான படைப்புகள் அணிவகுத்து நிற்கின்றன. தனுஷின் ‘ஓம்’, ‘பென்ஸ்’, ‘ராக்கா’, ‘டி56’, சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே27’, கார்த்தியின் ‘மார்ஷல்’, சூர்யாவின் ‘சூர்யா48’, ‘பிஎஸ்ஆர்01’, சிலம்பரசனின் புதிய திரைப்படம் மற்றும் ‘தமிழ் முருகன்’ என மிகப்பெரிய திரைப்படங்களுக்கு இவர்தான் இசையமைக்கவுள்ளார். திரைப்படங்களின் ஹைப் மற்றும் வெற்றியைத் தீர்மானிக்கும் முதன்மை இசைச் சக்தியாக மாறியுள்ள சாய் அபியங்கர், இன்று (நவம்பர் 4) தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மழை போல் பொழிந்து வருகின்றனர்.
