Homeசெய்திகள்சினிமாஇதனால தான் அவங்க ப்ரோமோஷனுக்கு வரல... நயன்தாரா குறித்து பிரபல நடிகர்!

இதனால தான் அவங்க ப்ரோமோஷனுக்கு வரல… நயன்தாரா குறித்து பிரபல நடிகர்!

-

- Advertisement -

நடிகை நயன்தாரா குறித்து பிரபல நடிகர் பேசியுள்ளார்.இதனால தான் அவங்க ப்ரோமோஷனுக்கு வரல... நயன்தாரா குறித்து பிரபல நடிகர்!

தென்னிந்திய திரை உலகில் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இதற்கிடையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் நடிகை நயன்தாரா கலந்துகொள்ளாதது குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்களும் சர்ச்சைகளும் சினிமா வட்டாரத்தில் பரவி வந்தன. இதனால தான் அவங்க ப்ரோமோஷனுக்கு வரல... நயன்தாரா குறித்து பிரபல நடிகர்!இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து திரைப்படப் பிரபலம் விச்சு விஸ்வநாத் அளித்துள்ள பேட்டி ஒன்று, அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது. ​தனது பேட்டியில் இதுகுறித்துத் தெளிவுபடுத்தியுள்ள விச்சு விஸ்வநாத், நடிகை நயன்தாரா, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்று வந்ததால், திட்டமிட்டபடி மூக்குத்தி அம்மன் 2 பட ப்ரமோஷன் நிகழ்வுகளுக்கு வர முடியவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் “எழுதுறவங்க பேசுறவங்க என்ன வேணா பேசுவாங்க. பத்து பேர்ல ஒன்பது பேரு நல்லவங்கன்னு சொன்னா, ஒருத்தர் மட்டும் கெட்டவன்னு சொல்லுவாங்க. ஒவ்வொன்னையும் கேட்டுட்டு அவங்க இப்படி சொல்றாங்க இவங்க இப்படி சொல்றாங்கன்னு நினைக்க கூடாது. இதுவும் கடந்து போகும். இதனால தான் அவங்க ப்ரோமோஷனுக்கு வரல... நயன்தாரா குறித்து பிரபல நடிகர்!அவங்களோட சூழ்நிலை அப்படி ஷூட்டிங்ல இருந்ததுனால வர முடியல. இந்த மாதிரி சொல்றாங்க கிட்ட படம் பேசும்” என்று தெரிவித்துள்ளார். ​பரப்பப்பட்ட வதந்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியான இந்த தகவலால், தேவையில்லாமல் கிளப்பப்பட்ட சர்ச்சைகள் அனைத்தும் தற்போது ஓய்ந்துள்ளன.

MUST READ