விஷாலின் புருஷன் திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.
திரையரங்குகளில் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து கொண்டாடும் முழுநீளப் பொழுதுபோக்குத் திரைப்படங்களை வழங்குவதில் வல்லவர் இயக்குனர் சுந்தர். சி. இவருடைய இயக்கத்தில் தயாராகி உள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர், நடிகர் விஷால், தமன்னா, கயடு லோகர், யோகி பாபு ஆகியோரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதியின் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்திற்கு புருஷன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படமும் கலகலப்பான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் முன்னதாக வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் குதூகலப்படுத்திய ‘மதகஜராஜா’ மற்றும் ‘ஆம்பள’ ஆகிய வெற்றித் திரைப்படங்களின் பாணியிலேயே, இந்தப் ‘புருஷன்’ திரைப்படமும் அட்ராசிட்டி நிறைந்த கலகலப்பான ஆக்ஷன் திருவிழாவாக உருவாகி வருகிறது. சிரிப்புக்கு பஞ்சமில்லாத நகைச்சுவைக் காட்சிகளும், அதிரடி சண்டைக் காட்சிகளும் படத்தில் தாராளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படமானது 2027 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என்று பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே மதகஜராஜா திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியாகி சக்க போடு போட்டதை போல் இந்த படமும் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை முழுமையாகச் சிரிக்க வைத்து மகிழ்விக்கும் அனைத்து அம்சங்களும் நிறைந்த இந்தத் திரைப்படம், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பிக்கும் ஒரு கொண்டாட்டப் படமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
