Homeசெய்திகள்சினிமாதீபாவளி ரேஸில் சிம்புவின் 'அரசன்'.... கோலிவுட்டை அதிரவைக்கும் பிரம்மாண்ட எதிர்பார்ப்பு!

தீபாவளி ரேஸில் சிம்புவின் ‘அரசன்’…. கோலிவுட்டை அதிரவைக்கும் பிரம்மாண்ட எதிர்பார்ப்பு!

-

- Advertisement -

சிம்புவின் அரசன் திரைப்படம் தீபாவளி ரேஸில் இணைய போவதாக தகவல் கசிந்துள்ளது.தீபாவளி ரேஸில் சிம்புவின் 'அரசன்'.... கோலிவுட்டை அதிரவைக்கும் பிரம்மாண்ட எதிர்பார்ப்பு!

தமிழ் திரையுலகில் மிரட்டலான கதைக்களங்களுக்கும், யதார்த்தமான ஆக்ஷன் திரைப்படங்களுக்கும் பெயர் பெற்றவர் இயக்குநர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில், சிலம்பரசன் முதன்முறையாக இணைந்துள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘அரசன்’. வடசென்னையின் பின்னணியில் அதிகாரம் மற்றும் கேங்ஸ்டர் மோதல்களை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி ரேஸில் சிம்புவின் 'அரசன்'.... கோலிவுட்டை அதிரவைக்கும் பிரம்மாண்ட எதிர்பார்ப்பு!​வெற்றிமாறனின் முத்திரையான ரத்தமும் சதையுமான யதார்த்தமான இயக்கமும், சிலம்பரசின் அனல் பறக்கும் நடிப்பும் இணைந்து இந்தப் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாக பலரும் நம்புகின்றனர். வடசென்னை படத்தின் யுனிவர்சாக உருவாகும் இந்த ஆக்ஷன் டிராமா பலருக்கும் விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அனிருத்தின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
​சினிமா வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டணியின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களைக் குதுகலமடையச் செய்து வருகிறது. அந்த வகையில் இந்த படம் தீபாவளி ரேஸில் இணையப் போவதாகவும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.தீபாவளி ரேஸில் சிம்புவின் 'அரசன்'.... கோலிவுட்டை அதிரவைக்கும் பிரம்மாண்ட எதிர்பார்ப்பு!கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன், யோகலட்சுமி ஆகியோரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ