Homeசெய்திகள்சினிமாஒட்டுமொத்த ரசிகர்களையும் உருகவைத்த சூர்யாவின் பேச்சு!

ஒட்டுமொத்த ரசிகர்களையும் உருகவைத்த சூர்யாவின் பேச்சு!

-

- Advertisement -

நடிகர் சூர்யா, தனது தி ஒன் என்ற அடைமொழி குறித்து பேசி உள்ளார்.ஒட்டுமொத்த ரசிகர்களையும் உருகவைத்த சூர்யாவின் பேச்சு!

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பான நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் சூர்யா. தற்போது இவர், ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. அதேசமயம் இன்னும் சில அடுத்தடுத்த அதிரடி திரைப்படங்களில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. ஒட்டுமொத்த ரசிகர்களையும் உருகவைத்த சூர்யாவின் பேச்சு!இந்நிலையில் நடிகர் சூர்யா, ​சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தனது அடைமொழியான “தி ஒன்” (The One) என்பது குறித்து பேசிய வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ​அந்த நிகழ்வில் பேசிய சூர்யா, “நான் தி ஒன் கிடையாது; உங்கள் ஒவ்வொருவராலும் தான் இந்த அடைமொழி உருவாகியிருக்கிறது. நாம் அனைவரும் சேர்ந்ததுதான் அந்த ஒன்று. என்னுடைய மனதில் இதனை நான் ஒரு தனி நபர் பட்டமாகவோ அல்லது அடைமொழியாகவோ பார்க்கவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்திருக்கும் போதுதான் அது சாத்தியமாகிறது” என மிகவும் நேர்த்தியாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசியுள்ளார்.
ஒட்டுமொத்த ரசிகர்களையும் உருகவைத்த சூர்யாவின் பேச்சு!அதாவது ​தனது வெற்றியின் பின்னணியில் இருக்கும் ரசிகர்கள், திரைப்படக் குழுவினர் மற்றும் திரைக்குப் பின்னால் உழைக்கும் ஒவ்வொருவரையும் கௌரவிக்கும் விதமாக சூர்யா பேசிய இந்த வார்த்தைகள், அவரது எளிமையையும் ரசிகர்களின் மீதான அன்பையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளது.

MUST READ