Homeசெய்திகள்சினிமாசமூக நலனில் தீவிரம் காட்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த்.... குவியும் பாராட்டுகள்!

சமூக நலனில் தீவிரம் காட்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த்…. குவியும் பாராட்டுகள்!

-

- Advertisement -

சௌந்தர்யா ரஜினிகாந்த் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமூக நலனில் தீவிரம் காட்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த்.... குவியும் பாராட்டுகள்!தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான படைப்புகளாலும், நவீன தொழில்நுட்பங்களைச் சினிமாவில் அறிமுகப்படுத்தியதாலும் பரவலாக அறியப்பட்ட பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், சினிமா தாண்டி பல சமூக நலப் பணிகளிலும் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறார். தமிழ் திரையுலகின் மைல்கல் திரைப்படமாகக் கருதப்படும், இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான ‘கோச்சடையான்’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் கவனம் ஈர்த்தவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார்.சமூக நலனில் தீவிரம் காட்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த்.... குவியும் பாராட்டுகள்! ​இந்நிலையில், கேன்சர் எனப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடி உதிர்தலால் அவதிப்படும் நோயாளிகளுக்கு உதவும் வகையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் தலைமுடி தானம் வழங்கும் முகாமை (Hair Donation Drive) சௌந்தர்யா ரஜினிகாந்த் நேரில் கலந்துகொண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். புற்றுநோய் விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகவும், நோயாளிகளுக்கு உளவியல் ரீதியான தைரியத்தை வழங்கும் நோக்கத்திலும் இந்த அரும்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக நலனில் தீவிரம் காட்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த்.... குவியும் பாராட்டுகள்!மேலும் இம்முகாமைச் சிறப்பிக்கும் வகையில், சௌந்தர்யா ரஜினிகாந்தின் இந்த சமூக அக்கறையான முன்னெடுப்புக்கும் , அதில் பங்கேற்ற 800க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்களின் இந்த உன்னதமான செயலுக்கும் திரையுலகப் பிரபலங்களும், பொதுமக்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ