தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷ், சமீபகாலமாகத் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் பேசும் கருத்துகள் பெரும் பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, அவர் விரைவில் அரசியலுக்கு வரக்கூடும் என்ற தகவல்கள் இணையத்தில் தொடர்ச்சியாக உலா வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்ததோடு மட்டுமல்லாமல் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது வழக்கம்போல தனுஷின் மேடைப் பேச்சுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்த விழாவில் தனுஷ் தனது திரைப்பயணம் மற்றும் ‘ஓம்’ படம் குறித்துப் பகிர்ந்துகொள்வாரா? அல்லது அவரது அரசியல் வருகை குறித்து பரவி வரும் செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ஏதேனும் சூசகமான அறிவிப்பை வெளியிடுவாரா? என்று திரையுலகினரும், அரசியல் வட்டாரங்களும், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ’ஓம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடை, தனுஷின் அடுத்தகட்டப் பாதைக்கான சிக்னலாக அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
It’s NovOMber, and time for the excitement to soar 🔥
#OMAudioLaunch – on 6th November, at the Sairam Engineering College in Chennai.
#OM Worldwide release on November 20 💥
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 1, 2026
மேலும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதும் சாய் அபியங்கர் இதற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
