Homeசெய்திகள்சினிமாபுதிய அவதாரத்தில் அர்ஜுன் தாஸ்... ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘ஜான் டோ’ திரைப்படம்!

புதிய அவதாரத்தில் அர்ஜுன் தாஸ்… ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘ஜான் டோ’ திரைப்படம்!

-

- Advertisement -

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜான் டோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய அவதாரத்தில் அர்ஜுன் தாஸ்... ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘ஜான் டோ’ திரைப்படம்!தனது காந்தக் குரலாலும் வித்தியாசமான கதைத் தேர்வாலும் ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஜான் டோ’ (John Doe). ‘கே.டி என்ற கருப்புத்துரை’ மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மதுமிதா இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.​விறுவிறுப்பான சைக்காலஜிக்கல் த்ரில்லர் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அர்ஜுன் தாஸ் ‘சந்துரு’ என்ற சவால் நிறைந்த காவல் துறை அதிகாரி வேடத்தில் முதன்முறையாகக் களமிறங்கியுள்ளார். இவருக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். மேலும் ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக் உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் தோன்றி ரசிகர்களைப் பிரமிக்க வைக்கத் தயாராக உள்ளனர். பிரம்மாண்டத் தயாரிப்புகளுக்குப் பெயர்பெற்ற ‘அர்கா மீடியாஒர்க்ஸ்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில், தமிழகத்தில் ‘ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிப்போனது. தற்போது ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு முழுமையாக முடிவு கட்டும் வகையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக லாக் செய்துள்ளது. புதிய அவதாரத்தில் அர்ஜுன் தாஸ்... ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘ஜான் டோ’ திரைப்படம்!அதன்படி இப்படம் வரும் நவம்பர் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இதன் அறிவிப்பு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைக்கு வரவுள்ள இப்படத்தைக் காண சினிமா பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

MUST READ