Homeசெய்திகள்சினிமாதீபாவளி விருந்தாக வரும் சூர்யாவின் 'சீன்'..... வைரலாகும் டிரைலர்!

தீபாவளி விருந்தாக வரும் சூர்யாவின் ‘சீன்’….. வைரலாகும் டிரைலர்!

-

- Advertisement -

சூர்யாவின் சீன் பட டிரைலர் வெளியாகி உள்ளது.தீபாவளி விருந்தாக வரும் சூர்யாவின் 'சீன்'..... வைரலாகும் டிரைலர்!

நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சீன்’ (SCENE) திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘ஆவேஷம்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குனர் ஜித்து மாதவன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூர்யா ‘டிஎஸ்பி இன்பராஜ்’ என்ற அதிரடி காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடித்துள்ளார். மேலும் நஸ்லென், லால், ஆனந்தராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யாவின் ‘2D என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளன.

we-r-hiring

திரைப்படத் தணிக்கைக் குழு இப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனிடையே படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 31) சென்னையில் நடைபெறுகிறது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பண்டிகைக் காலத்தில் திரைக்கு வரும் இத்திரைப்படம் ரசிகர்களுக்குச் சிறந்த விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ