டேர் டெவில் படத்தின் ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் தனது பிரம்மாண்ட ஸ்டண்ட் மற்றும் மாஸ் நடிப்பால் கோடி ரசிகர்களைக் கவர்ந்துள்ள முன்னணி உச்ச நட்சத்திரம் அஜித். இவர் தனது அடுத்த திரைப்படத்திற்காக மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் இயக்குநருடன் கைகோர்த்துள்ளார். அதன்படி குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளார். அடுத்தது ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா, பார்த்திபன், சுனில், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி வருகின்றன.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் பணிகளை மிகவும் கவனமாகவும் விறுவிறுப்பாகவும் படக்குழுவினர் நகர்த்தி வருகின்றனர். அதன்படி இன்று (நவம்பர் 2) இந்த படமானது பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் திரையுலக வட்டாரங்களையும், ரசிகர்களையும் உச்சக்கட்ட ஆர்வத்தில் ஆழ்த்தும் வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தீபாவளி விடுமுறைகள் முடிவடைந்த கையோடு நவம்பர் 12-ஆம் தேதி காலை 8 மணி அளவில் முதற்கட்டப் படப்பிடிப்பு மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் ஹைதராபாத்தில் உள்ள பிரபல திரைப்பட நகரில் அமைக்கப்படவுள்ள பிரம்மாண்ட அரங்குகளில் இப்படத்தின் முக்கியமான ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஆரம்பத்திலேயே இப்படத்திற்கு கிடைத்துள்ள அதீத வரவேற்பும், அடுத்தடுத்து வெளியாகும் இந்த சுவாரஸ்யமான தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகமாக்குகிறது.
